பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்

பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். லெபனான் நாட்டின் வரலாற்றில் இந்த வெடிவிபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசால் நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியது தொடர்பாக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் அதிபர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக … Read more

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா … Read more

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை … Read more

இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா

இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரத்து 506 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,218 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 142 பேர் பலியாகினர்.

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய … Read more

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

கைபர் பக்துங்வா என்ற மாகாணம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  மொஹமண்ட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. … Read more

78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய காட்டுத்தீ

78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய காட்டுத்தீ

லிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் … Read more

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று தெரிவித்தார். கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் … Read more

நிரவ் மோடிக்கு தற்கொலை செய்து கொள்ளுவதைப் தவிர வேறு வழியில்லை

நிரவ் மோடிக்கு தற்கொலை செய்து கொள்ளுவதைப் தவிர வேறு வழியில்லை

நிரவ் மோடி மீது ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி  மீது வழக்கு தொடரப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். 2-வது நாளான நேற்று, நிரவ் மோடி தரப்பு வக்கீல் கிளாரி மோன்ட்கொமேரி தனது வாதத்தை தொடங்கினார். இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட … Read more