அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தின் கேனோஷா  நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை நீடிக்கிறது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது கறுப்பின இளையர் காவல்துறையால் சுடப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. செவ்வாய் இரவு நடந்த வன்செயல்களில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமுற்றார். 17 வயது வெள்ளையின இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய கும்பலுடன் … Read more

அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் … Read more

தொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

தொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு 182 பவுண்டு (ரூ. 17759.60 இந்திய பண மதிப்பில்) வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை … Read more

ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து

ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை, நோக்கி கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொன்று குவித்தார். இந்நிலையில், பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். தண்டனை குறித்து  நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறும் போது ஆஸ்திரேலியா தனது ஆயுள் தண்டனையை அனுபவிக்க பயங்கரவாதி பிரென்டன் … Read more

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் – கெவின் மேயர்

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் - கெவின் மேயர்

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டு இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கான டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை … Read more

புல்வாமா தாக்குதல் பற்றி இம்ரான்கான் அதிர்ச்சி தகவல்

புல்வாமா தாக்குதல் பற்றி இம்ரான்கான் அதிர்ச்சி தகவல்

2019  ஆம் ஆண்டு  பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயன்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ‘குற்றப்பத்திரிகை’ என்று அழைக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. காஷ்மீர் கடந்த ஆண்டு. பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் … Read more

டிரம்ப்பை பற்றி அவரது மனைவி இப்படி கூறினாரா?

டிரம்ப்பை பற்றி அவரது மனைவி இப்படி கூறினாரா?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் நேற்று முன்தினம் குடியரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் நான் இங்கே இருக்கிறேன். ஏனென்றால் என் கணவர் நமது ஜனாதிபதியாகவும், தளபதியாகவும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். … Read more

இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?

முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் ராணுவ பின்னணி கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும் இவர் பேசும்போது புதிய இலங்கை அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘முதலில் இந்தியா’ ஆகும். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். … Read more

அமெரிக்காவில் மீண்டும் இப்படி ஒரு பிரச்சினையா?

அமெரிக்காவில் மீண்டும் இப்படி ஒரு பிரச்சினையா?

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் காவல்துறையால் சுடப்பட்ட கறுப்பின ஆடவர் முடமாகிவிட்டதாகவும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவருடைய குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்பில் 3வது நாளாக கெனோஷா (Kenosha) நகரின் லேக்ஃப்ரொன்ட் டவுனில் (Lakefront Town) கலவரம் தொடர்ந்ததால், அம்மாநில ஆளுநர் நெருக்கடிநிலையை அறிவித்தார். நகரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டத் தேசியக் காவல்படையை இறக்கப்போவதாக அவர் கூறினார். இதற்கிடையே, பொதுமக்கள் நிதானமாக இருக்குமாறு பிலேக் (Blake) எனப்படும் அந்த 29 வயதுக் கறுப்பின ஆடவரின் தாய் கேட்டுக்கொண்டார். 6 … Read more