இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!
பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது.
நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. இதனால் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக நாம் கொண்டாடவில்லை.
இந்த தமிழ்நாடு என்று பெயர் எழுவதற்கு காரணம், 1956 ஆம் ஆண்டு தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க கூறி 73 நாட்கள் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தி இறந்து விட்டார்.
இவரையடுத்து 1962 ல் ராஜ்யசபாவில் பூபேஷ் குப்தா எம்.பி. மற்றும் 1964 ஆம் ஆண்டு திமுகவின் ராம.அரங்கண்ணல் எம்.எல்.ஏ. ஆகியோர் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரினர். ஆனால் இவர்கள் அனைவரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து இறுதியாக 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி துவங்கியது. இவர் ஆட்சி அமைத்த உடனேயே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.
எனவே, இந்த ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்காக இன்று ஒரு பேரணி அமைத்து அதில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது.
இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழகத்தை போற்றும் வகையில், பதாகைகளை ஏந்திச் செல்வார்கள். இதேப்போல், அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் இதற்காக சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த புகைப்படக் கண்காட்சியானது இன்று முதல் ஜூலை 23 வரை நடைபெற இருக்கிறது.இதில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த விழாவின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் மாலை அணிவிப்பார்கள்.
இதனைத்தொடர்ந்து விழாவிற்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அதில் “வளர்க தமிழ்நாடு” என்னும் தலைப்பில் முனைவர் ராஜேந்திரன் பேச உள்ளார்.
அதேப்போல, “எழுக தமிழ்நாடு” என்னும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் பேச உள்ளார். எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.