தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது. அவ்வாறு சேலம் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகிறது.அவ்வாறு உள்ள பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் சேலம் மாவட்டம் நான்குரோடு , அரிசி பாளையம் பகுதியில் சாய் விஹார் என்ற தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த தொடக்கப்பள்ளி அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதால் அதனை மூடும் படி வட்டார கல்வி அதிகாரி உத்தரவிட்டார். வட்டார கல்வி அதிகாரி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பள்ளி சார்பாக வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது.
சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தொடக்கப்பள்ளியை பள்ளியை மூடும்படி கல்வி அதிகாரி உத்தரவை எதிர்த்து,போடப்பட்ட வழக்கை நீதிபதி விசாரித்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.