தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

0
149
Tamil Nadu Medical Expert Committee Recommends to extend the Lockdown
Tamil Nadu Medical Expert Committee Recommends to extend the Lockdown

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்தடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய 14 பேர் கொண்ட மருத்துவ குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு நியமித்திருந்த இந்த மருத்துவர் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 14 உறுப்பினர்களை கொண்ட இந்த மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில், தற்போதுள்ள இந்த லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இது மட்டுமில்லாமல் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் நடத்தவுள்ள அந்த ஆலோசனை கூட்டத்திலும் தமிழக மருத்துவர் குழுவினரின் அளித்த இந்த பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒடிஷாவில் வரும் ஏப்ரல் 30 ஆம்  தேதி வரை தற்போதுள்ள லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகர்ப்பிணிகளை ஏன் கோரோனா தாக்கவில்லை? தமிழ் கலாச்சாரமும் அதன் பின்னணியும்!
Next articleகொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்