கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

0
87
Rain Alert in Tamil Nadu
Rain Alert in Tamil Nadu

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மிதமான மழை மற்றும் மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொது மக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். அதாவது நாளுக்கு நாள் கொரோனாவின் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது. அதனால் ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்போது சமூக விலகலையும், ஊரடங்கையும் மிக மிக தீவிரமாக அச்சத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். கொரோனா பயத்துடன் மக்கள் கடுமையான வெப்பத்திற்கும் ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது வரும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகள் தொடங்கி அடுத்து வரும் 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யவுள்ளதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து 2 தினங்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாகவும் மழை சம்பந்தமான தகவல் வெளியானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய போவதாகவும், வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துருந்தது.

இந்நிலையில், தற்போது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Ammasi Manickam