25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

0
204
#image_title

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது.

Video Link : https://www.instagram.com/reel/C4m5ZF-BswO/?utm_source=ig_embed&ig_rid=a0568c95-ef7f-4a8d-9c48-03f388744e2d

நடிகை ஷாலினி சினிமா உலகில் நாயகியாக நடித்து வந்த காலகட்டம் அது. பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் நாயகியாக நடிக்க ஷாலினியை கேட்ட நேரத்திலும், தான் காதலித்த அஜித்தை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவுலகில் இருந்து முழுவதுமாக விலகினார் ஷாலினி.

அதன் பின்னர் ஷாலினியை நம்மால் வெகு சில பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடிந்தது. இவர்களுக்கு பல வருடங்கள் கழித்து முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது, பின்னர் இரண்டாவது ஒரு மகன் பிறந்தான். இந்நிலையில், இந்த காதல் ஜோடி தங்களது 25வது திருமண நாளினை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இதனை முன்னிட்டு சென்னையில் ஒரு ரிசார்ட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் கேக் வெட்டி தங்களது திருமண நாளினை கொண்டாடிய தருணத்தில் பின்னணியில் ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.