தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

0
178
#image_title

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

கடந்த 3 வாரத்திற்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலாவாக மலைப்பகுதியான ‘கொடைக்கானல்’ செல்கிறார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் குணா குகைக்குள் சென்று சிக்கி கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் கதையினை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் தான் இது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

சிறிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி ஒருவார காலத்தில் சுமார் ரூ.100 கோடி வசூலினை ஈட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி 22 நாட்களான நிலையில் இப்படம் ரூ.176 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது.

இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூலை பெற்ற திரைப்படம் என்னும் பெருமையினை பெற்று தற்போது அந்த வரிசையிலும் இப்படம் முதல் இடத்தினை வகிக்கிறது. அதே போல் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.50 கோடி வசூலினை ஈட்டியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் முதன்முறையாக ரூ.50 கோடி வரை வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்பது கவனிக்கத்தக்கது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை மற்றும் வரவேற்பினை ஏதேனும் ஒரு வெளி மாநில திரைப்படம் பெறுவது அண்மைக்காலத்தில் ஓர் வழக்கமாக உள்ளது. அதன்படி, ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’, உள்ளிட்ட திரைப்பட வரிசையில் தற்போது இப்படமும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.