விஜய்யுடன் ஜோடி சேரும் அந்த பட நடிகை!! எதிர்பார்ப்பை கிளப்பும் தளபதி 68!!
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்பொழுது கைதி,விக்ரம் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸை ஒரு பதம் பார்த்தது.இதனை தொடர்ந்து தற்பொழுது உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் அவர்களின் பெயர் வைக்கப்படாத தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்க இருக்கின்றார்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் தமன் இசையமைக்க உள்ளனர்.இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் முதலில் ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது.ஆனால் அதனை படக்குழு உறுதியாக சொல்ல வில்லை.இந்நிலையில் தற்பொழுது தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.இதனால் பிரியங்கா அருள் மோகனின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிரியங்கா அருள் மோகன் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன்,சூர்யா உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.இப்படத்தில் இவரின் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.அறிமுக படமே சூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு ‘டான்’ என்ற படத்தில் நடித்தார்.இவர்களின் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களும் 100 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது.இதன் காரணமாக பிரியங்கா அருள் மோகனுக்கு சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது இவர் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.