விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்!!

0
31

 

விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்…

 

அமெரிக்காவில் விமானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விமானத்தில் இருந்த 3 வயது குழந்தையிடம் இருந்து சிற்றுண்டியை பறித்ததாக பணிப்பெண் ஒருவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த தாரா என்ற பயணி எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விமானத்தில் பயணம் செய்த தாரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “நானும் என்னுடைய 3 வயது மருமகனும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தோம். பயணத்தின் பொழுது நானும் எனது மருமகனும் ஐ-பாடில் கேம் விளையாடிக் கொண்டிருந்தோம்.

 

அந்த சமயம் விமானத்தில் பணி செய்த பணிப்பெண் அங்கு வந்து எங்களிடம் கேட்காமலேயே என்னுடைய மருமகன் கையில் இருந்த சிற்றுண்டியை எடுத்துச் சொன்றார். இது எங்களை மிகவும் கோபமடையச் செய்தது.

 

இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் கொடுக்கவுள்ளேன் என்று பதிவிட்டிருந்தார். மேலும் தாரா அவர்கள் அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

 

அந்த புகைப்படம் குழந்தையின் கையில் இருந்த சிற்றுண்டி பெட்டி ஆகும். அதில் வெண்ணெய், வேர்கடலை, தானியங்கள், ஜாம் சாண்ட்விச் போன்ற திண்பண்டங்கள் இருந்தன. தாரா அவர்கள் பதிவிட்ட அந்த பதிவை அடுத்து அந்த பெண் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.