முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்க்கு மாதம்தோறும் சிறப்பு படி!
சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட மோட்டார் வாகன சட்டத்தின்படி நேற்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்யப்படுவதுடன் அவரது பின்னல் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அந்த அறிவிப்பில் தமிழகம் காவல்துறை இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு ,தமிழ்நாடு சிறப்புக் காவல்,ஆயுதப்படை உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார்களுக்கு மாதம் ரூ 300சிறப்பு படியாக வழங்கப்படும்.
மேலும் இந்த அறிவிப்பின் படி காவலர்கள் தொடங்கி காவல் ஆய்வாளர்கள் வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ 300 சிறப்பு படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை ஒன்று வெளியிட்டது.
அந்த அரசாணையின்படி இந்த மாதம் முதல் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ரூ300சிறப்பு படி வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் இதற்காக தமிழக அரசு ரூ42 கோடியே 22ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.