அமெரிக்காவில் குடியேறிய இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் இக்பால் சிங். 62 வயதான இவர் 1983-ம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வந்தார். இவருடன் தாய் மற்றும் மனைவி இருந்ததாக கூறப்படுகிறது. டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய் மற்றும் மனைவி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலீசார் இக்பால் சிங் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த இக்பால் சிங்கை மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.