மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் ஜோடியால் வென்ற ஆஸ்திரேலியா அணி

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடராகும். இதில் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்த நிலையில் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

கடைசி போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி  நேற்று இந்திய நேரப்படி மாலை 5.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவருக்கு 294 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்க்ஸ் 118 ரன்கள் குவித்தார்.