பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆட்டோ  ஓட்டி வருபவர் தான் டிரைவர் ராஜா என்பவர்.இவர் அவ்வப்போது பள்ளி  மாணவிகளை சவாரிக்கு ஏற்றி சென்று வருவார்.இந்நிலையில் சம்பவத்தன்று மாணவ மற்றும் மாணவிகளை ஏற்றுக்கொண்டு மாதா கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அந்த மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ராமநாதன் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சாய்சரண் ,அஞ்சனா ,சாய் தர்ஷினி, கோகுலகிருஷ்ணன் மற்றும் குணஸ்ரீ ஆகிய ஐந்து மாணவ மற்றும்  மாணவிகள் பலத்த  காயமடைந்தனர்.

இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment