இந்திய அணியின் ஆல்ரவுண்டருக்கு குழந்தை பிறந்துள்ளது

கடந்த ஆண்டு உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அதன் பின் அவ்வபோது தனது காதலியான இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச் உடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர். பின் தான் அப்பா ஆக போகிறேன் என்று மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டருக்கு குழந்தை பிறந்துள்ளது
இந்நிலையில் நேற்று அவருக்கு குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தந்தையான சந்தோஷத்தில் உள்ள பாண்ட்யா, குழந்தையின் கையை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு  இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment