உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்!

Photo of author

By Divya

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்!

ருசியான எண்ணெய் உணவால் வயிற்றில் கொழுப்பு தேங்கி தொப்பையாக மாறிவிடுகிறது. இவை உடல் அழகை மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிந்தால் அவை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் சோர்வு, சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்…

*முருங்கை இலை
*இஞ்சி துண்டு
*க்ரீன் டீ பேக்
*தேன்
*எலுமிச்சை சாறு

செய்முறை…

ஒரு கப் அளவு முருங்கை கீரையை உலர்த்தி பொடித்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

பிறகு முருங்கை கீரை பொடியை 2 ஸ்பூன் அளவு அதில் சேர்க்கவும்.

இவை கொதிக்கும் தருணத்தில் 1 துண்டு இஞ்சி சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அதில் 1 க்ரீன் டீ பேக் போடவும். அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்க்கவும்.

பிறகு க்ரீன் டீ பேக்கை எடுத்துவிட்டு அருந்தவும். இந்த பானம் வயிற்றுப் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.