மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!
முடக்கு வாதத்திற்கு சிறந்த கீரையாக முடக்கத்தான் கீரை விளங்குகிறது.இதில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நரம்பு தளர்ச்சி,மூல நோய்கள்,தோல் சம்மந்தப்பட்ட நோய்,காது வலி,மாதவிடாய் பிரச்சனை,தலைவலி,பொடுகு தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
*முடகத்தான் கீரை – 1 கைப்பிடி அளவு
*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
*தக்காளி பழம் – 1(நறுக்கியது)
*பூண்டு பற்கள் – 5
*சீரகம் – 1 தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் – 5
*கறிவேப்பிலை – 1 கொத்து
*கொத்தமல்லி தழை – 1 கொத்து
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஓரு கைப்பிடி அளவு முடகத்தான் கீரையை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தமாக அலசி கொள்ளவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள முடக்கத்தான் கீரை சேர்க்கவும்.அதனோடு 1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி கருப்பு மிளகு,சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
3.பிறகு 5 பூண்டு பற்கள் எடுத்து அதில் போடவும்.அதோடு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
4.அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.பின்னர் வாசனைக்காக அதில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பின்னர் இதை பருகவும்.