ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற ஏதோ திரவம் ஒன்றை குடித்துள்ளார்.அதனால் இவருக்கு சிறுநீரகம் செயலிழந்திருப்பதாகவும் கூறினார்கள்.

அப்போது அஸ்வின் பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கும் வரும் பொழுது பள்ளி சீருடையில் இருந்த ஒரு மாணவன் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொன்னதாகவும் அதனை தாம் குடித்ததாகவும் அஸ்வின் பெற்றோரிடம் தெரிவித்ததை மருத்துவரிடம் கூறினார்கள்.அப்போது அந்த குளிர்பானத்தில் தான் ஆசிட் கலந்திருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து அஸ்வினின் தாயார் சோபியா போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதனால் அஸ்வினின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் சென்று மனு அளித்திருந்தார்.இந்நிலையில் நேற்று மாலை அஸ்வினின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த அஸ்வினின் உடல் ஆச்சரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரபட்டது.மேலும் சிறுவனின் பிரேத பரிசோதனையை சிபிசிஐடி பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அஸ்வினிற்கு குளிர்பானம் கொடுத்தது யார் என்பது மர்மமாகவே இருகின்றது.மாணவனின் இந்த வழக்கு போலீசார் நடத்தி வந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும் அஸ்வின் இறப்பு குறித்து விரைவில் சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment