திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

Photo of author

By Kowsalya

திருமணமான 15 நாட்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தாம்பரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் இவர் 15 நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த சுலோசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன செல்லப்பன் மருத்துவமனைக்கு அழைத்து உள்ளார்.

மறுத்த சுலோசனா படுத்து வீட்டிலேயே உறங்கி உள்ளார். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்க்கும் பொழுது பரிதாபமாக சுலோசனா உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனை அடுத்து செல்லப்பன் அருகிலுள்ள சேலையூர் காவல் நிலையத்தில் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சேலையூர் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.