ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

0
179
The case against Jayalalithaa! Order of the High Court!
The case against Jayalalithaa! Order of the High Court!

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கடந்த 1995 ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்காக அலங்காரம் செய்வதற்காக ரூ 59 லட்சத்தி 99 ஆயிரம் செலவு செய்திருந்தார். மேலும் அந்த தொகையை 19 97 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சொத்து மதிப்பீடு உத்தரவிட்டனர். மேலும் இந்த தொகையை 12 எம்பி எம்எல்ஏ களுக்கு சேர்ந்து செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதையும் ஏற்று பழைய உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

மேலும் புதிதாக மதிப்பீடு செய்ய வருமானவரித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தினார்கள்.மேலும்  விசாரிக்கும்போது ஜெயலலிதா தான் செலவு செய்தார் என தீர்மானித்து உத்தரவு பிறப்பித்தார். அதனை வருமானவரித்துறை மேல்முறையீட்டு ரத்து செய்தது. மேலும் சுதாகரன் திருமணம் நிச்சயதார்த்தத்தின் போது கொடுக்கப்பட்ட லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்கப்பட்டது இதயும் வருமானவரித்துறை மேல்முறையீடு தீர்ப்பையும் ரத்து செய்தது.

மேலும் 1998ல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை எனக் கூறிஅந்த ஆண்டுகளின் அசையும்  சொத்துக்கள் நாலு கோடி என வருமானவரித்துறையினர்  அறிவித்துள்ளனர். மேலும் ஜெயலலிதா மனுவை ஏற்று ஆணையர் உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பையும் ரத்து செய்துள்ளது. வருமானவரித்துறை மேல் முறையீடு தீர்ப்பையும் ரத்து செய்தது. பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து வருமானவரித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் மூன்று வழக்குகளை போட்டிருந்தனர். அந்த வழக்கை  மகாதேவன் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமரவும் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த  விசாரணையில் ஜெயலலிதா இறந்து விட்டதால் இந்த மூன்று வழக்குகள் குறித்து அவரது சட்டபூர்வமான வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய  இருவரும் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Previous articleகைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்
Next articleதிருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..