திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

0
150
These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.
These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பதி  ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே இணையதளம் மூலம் பதிவு செய்து திருப்பதிக்கு  வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வார இறுதி நாட்கள் கூட்டமும் திருவிழாவும் வருகிற 19 ஆம்  தேதி வரை கோலாகலமாக கொண்டாப்படும். மேலும் புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17ஆம்  தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்குவும்  வாய்ப்புள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு  முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்த்து வர வேண்டும். மேலும் சில முக்கிய நாட்களில் பக்தர்கள் அனைவரையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சாமியை  தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் பக்தர்கள் மத்தியும் சலசலப்பை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K