பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, எம்.எல்.ஏ அருள் ஆகியோர் முன்னிலை வகிக்க, முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் இதற்கு தலைமை தாங்கினார்.
மேலும் இந்த ஆரப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, இந்த கொலை சம்பவம் நிகழ முக்கிய காரணமே மது மற்றும் போதை பொருட்கள் தான். எனவே, நேர்மையான அதிகாரிகளை காவல் துறையில் நியமிக்க வேண்டும்.
பாமக வினரை இவ்வாறு நீங்கள் செய்வதனால் எங்களுக்குள் கோவம் மிகவும் உள்ளது. அதை நாங்கள் வெளியே கொண்டு வருவதற்குள் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறி உள்ளார்.
அதன் பிறகு நான் எவ்வளவு சொன்னாலும் என் கட்சிக்காரர்கள் கேட்க மாட்டார்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆர்பாட்டத்தில் மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
அடுத்த படியாக அங்கிருந்த நிருபர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை, தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாமல்லபுரத்தில் அதிகாரிகள் நிலத்தை ஏமாற்றி விற்க பார்ப்பதையும் முதல்வர் தடுக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.
இதன் பிறகு இவர் கொலை செய்யப்பட்ட நாகராஜ் வீட்டுக்கு சென்று அவரின் படத்திற்கு மலர் மாலையை செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார்.