கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

0
128

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

நம் இந்திய நாட்டில் பாரம்பரிய கைவினை நிபுணர்கள் பயனடையும், மத்திய அரசு புதிய திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது.

“பிரதமரின் விஸ்வகர்மா” என்னும் திட்டம் கைவினை தொழிலாளர்களை, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலை நம்பியுள்ளவர்கள், சலவை தொழிலில் ஈடுபட்டுள்ளோர், முடி திருத்தம் செய்வோர் என சுமார் 32 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக கொண்டுள்ளது, முதற்கட்டத்தில் இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்று 500 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் இப்பயிற்சி முடிந்தபிறகு, சுயதொழில் மேற்கொள்வோருக்கு தொழிலுக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்க 15,000 உதவி தொகையும் வழங்கப்படும்.

மேலும், குறைந்தபட்சமாக 5% வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கட்டணத்தொகையும் மத்திய அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று நடைமுறைப்படுத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!
Next articleமுடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…