எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

0
242
#image_title

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

உச்சநீதி மன்றம் வழங்கிய அவகாசம் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விவரங்களை திரட்ட தாமதமாவதால் ஜுன் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி விவரங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எஸ.பி.ஐ.வங்கியை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுலபமாக சேகரிக்கக்கூடிய இதுவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வழங்குவதில் என்ன பிரச்சனை?, 24க்கும் குறைவான அரசியல் கட்சிதான் தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடைப் பெற்றுள்ளது அதன் தகவல்களை சேகரிப்பது என்பது சுலபம் தானே? தீர்ப்பு வழங்கப்பட்டு 26 நாட்கள் ஆகிறது இந்த நாட்களிலில் குறைந்தது பத்தாயிரம் தகவல்களை சேகரித்து இருக்க முடியும் ஆனால் தகவல்களை சேகரிக்க மீண்டும் கால அவகாசம் கோறுவது ஏன்?, தேர்தல் பத்திரங்களை வாங்கும் பொழுதே வாங்குபவர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை புதுப்பித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எஸ்.பி.ஐ.வங்கியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

Previous articleபாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?
Next article12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!