காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு!

காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு!

நேற்று முன்தினம் கோவை ரயில் நிலைய வளாகத்தில் மூன்று சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். அதனை கண்ட ரயில்வே சைல்டு லைன் அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தனர்.அப்போது பீகாரில் இருந்து மூன்று சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 15  வயதான இரண்டு சிறுவர்கள் மற்றும் 16 வயதான ஒரு சிறுவன் என மூவரையும் மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

இதனையடுத்து சிறுவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்ச்சியில் காப்பகத்தினர் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் இருந்து மாயமாகினார்கள். அவர்களை பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து பெரிய கடைவீதி போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Comment