வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!
சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் ஒரு பப்ஸை சாப்பிடுவதற்காக எடுத்தார்.
அப்பொழுது அந்த பப்ஸில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பப்ஸில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் உடனே அந்த கடையில் காட்டினார். அந்த கடைக்காரர் வாடிக்கையாளரை சமாதானம் செய்து வேறு ஒரு பர்ஸ் வழங்கினார்.
இது குறித்து சிவகாசி மாநகராட்சி உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சிவகாசி மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜா முத்து அவர் பேக்கரிக்கு வந்து ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் முடிவில் பாதுகாப்பு இல்லாத வகையில் உணவுப் பண்டங்களை தயாரிப்பது, உணவை கையாளுபவர்கள் தங்களுடைய சுத்தத்தை கடைபிடிக்காமல் இருப்பது உள்பட 9 வகையான குறைகள் பேக்கரி மீது சுட்டிக் காட்டப்பட்டது. இந்நிலையில் அந்த பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கிய உணவுத்துறை அலுவலர் ராஜா முத்து அவர்கள் அந்த பேக்கரிக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்தார். இந்நிலையில் வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.