மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!!

0
73
#image_title

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!!

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர்24) தொடங்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்கள் இதே நாளில் முடி சூடிக் கொண்டார். இதை கொண்டாடும் விதமாக மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாள் தினத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று(அக்டோபர்24) மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர்24) தொடங்கிய கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் சதய நாளான நாளை(அக்டோபர்25) 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழாவை முன்னிட்டு இன்று(அக்டோபர்24) மாலை திருமுறை பண்ணிசை, திருமுறை இசை, நாத சங்கமம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து தென்னக பண்பாட்டு மையம் சார்பில் மாலை 5.30 மணிக்கு 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அது மட்டுமில்லாமல் இன்று(அக்டோபர்24) இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் அவர்களின் தலைமையில் கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 8.15 மணிக்கு சிவதாண்டவம் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும் சதய விழா நாளான நாளை(அக்டோபர்25) காலை 7.20 மணிக்கு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள ராஜராஜ சோழன் அவர்களின் சிலைக்கு மாலை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை(அக்டோபர்25) காலை 8 மணிக்கு திருமுறை திருவீதி உலா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம் நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து நாளை(அக்டோபர்25) மதியம் 1.40 மணியளவில் பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, மங்கள இசை, தேவார இன்னிசை என்று அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. மேலும் நாளை(அக்டோபர்25) மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை(அக்டோபர்25) மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறவுள்ளது. நிறைவு விழாவில் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் வ.பழனியப்பன், கோபாலகிருஷ்ணன், மருத்துவர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

மேலும் நாளை(அக்டோபர்25) இரவு 8 மணிக்கு சுகிசிவம் அவர்களின் தலைமையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சதய விழாவின் பொழுது இனி வரும் அனைத்து சதய விழாக்களும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்தாண்டுக்கான சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது.