பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை

Photo of author

By Parthipan K

பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை

Parthipan K

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை ஹாங்காங்கில் இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை ன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கிற்கு டெல்லியில் இருந்து விமானங்களில் வந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.