நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் நீட்நுழைவு  தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உள்பட நாடு முழுவதும் 18  லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதினார்கள். நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.