முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்!

0
306
The disaster caused by Facebook! The police rescued the girl at the bus station!
The disaster caused by Facebook! The police rescued the girl at the bus station!

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை அடுத்த செம்பகவுண்டன் வலசு பகுதியில் வசித்து வருபவர் தமிழரசு.இவர் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் தமிழரசுவிற்கும் ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில் சிறுமி ஆயுத பூஜையை முன்னிட்டு அவர் வேலை பார்க்கும் இடத்தில் பூஜை நடப்பதாகவும் அதில் கலந்து கொள்ள செல்வதாகவும் அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதற்கு அவருடைய பெற்றோர் அனுமதித்ததும் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுமியை தமிழரசு கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

அந்த தகவலை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கொடுமுடி பேருந்து நிலையத்தில் சிறுமியும் தமிழரசும் நின்று கொண்டுள்ளனர் என போலீசார்க்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.பிறகு தமிழசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.அதனைதொடர்ந்து அவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Previous article2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?
Next articleபாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here