பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

0
117

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது.

2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர். அதில் “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. 140 கி மீ வேகத்துக்கு வீசும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மற்ற அணிகளில் இப்படி ஒரு அசுரக் கூட்டணி இல்லை.

 ஆனால் பாகிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு பலமாக இல்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதனால் பாபர் ஆசாம் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய மைதானங்களில் சிக்ஸ் எல்லை அதிகம் என்பதால் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி விக்கெட்களை வீழ்த்த முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளும் மோது போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி நடக்கும் அன்று மைதானம் இருக்கும் பகுதியில் சுமார் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.