கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்! 

0
251
#image_title

கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்! 

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்ததில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சியான இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பூரண மதுவிலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மதுவிலக்கானது அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தை மறக்க முடியாத பல்வேறு நபர்கள் இதனை வாங்கி குடித்து வருவதால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, அம்மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டம் மொதிஹரி, துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு நபர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  

இதனால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவத்தில் நேற்று வரை 26 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.  இந்நிலையில், மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலரும் பலியானதால் இன்று பலி எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.

இதுவரை கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராய கடத்தல் கும்பலை சேர்ந்த 26 பேர் உள்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஇனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 
Next articleசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து!