விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!

Parthipan K

The doctor died mysteriously in the hostel! Excitement in Coimbatore!

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் ரங்கா(34)இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர் இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இவர் வித்யா நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளார்.இவர் நேற்று மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை.அதனால் அவருடன் வேலை பார்க்கும் டாக்டர் கவுதம் ராஜ் போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் ரங்கா போனை எடுக்கவில்லை.அதனால் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அவர் தங்கியிருந்த அறையானது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.அதன் பிறகு அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அவர் அறையின் பபடுக்கையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் கூறியுள்ளனர்.இதனையடுத்து இவர் எப்படி உயிரிழந்தார் என சந்தேகம் இருப்பதால் பீளமேடு போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.