தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளன.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 6.45 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான வார்னர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் 7 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்ச பிஞ்ச் 40 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பட்லர் 77 ரன்கள் குவித்தார்.