அரசு அறிவித்த அதிரடி திட்டம்! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

0
122

நேற்று திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால்,கொரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களையும் , துன்பங்களையும் அனுபவித்து போராடி வருவதால் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதுவும் 40 சதவீத கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும், மீதி தொகையை பள்ளிகள் திறந்த பிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு தவணைகளாக கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கடந்த வாரமே அவர் அறிவித்திருந்தார்.

ஆனால், அரசு உத்தரவை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 100 சதவீதக்கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் வற்புறுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. அரசு உத்தரவை மீறி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்க குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து நேற்று இரவு முதலே அரசுக்கு கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை பற்றி பல புகார்கள் சென்றன. அதில் சில புகார்கள் கொடுத்த பெற்றோர் கூறியது என்னவென்றால், கல்வி நிறுவனங்கள் இதுகுறித்து வெளியே புகார் அளித்தால் புகார் அளித்த மாணவனின் கல்வி வீணாகிவிடும் என மறைமுகமாக மிரட்டி உள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

இதைக் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளனர்.

Previous articleபெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!
Next articleவாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!