பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

0
79
Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!
Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

கல்வியியல் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக நேற்று தமிழக முதல்வர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து உள்ளார். இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஐ. லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் இவ்வாறு கூறி உள்ளார்.
இந்த செயலை இந்த கருவியால் இவன் முடிக்க வல்லவன் என்பதை தெரிந்துகொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணான வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதையும் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து இருப்பது இந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது.
பட்டிமன்ற பெயரில் பெண்களை இழிவாக பேசுவதையும் அரசியல் கட்சி தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரீகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்க தொடர்ந்து முயற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டவர் ஐ.லியோனி.
நகைச்சுவை என்றப்பெயரில் அரசியல் கட்சி தலைவர்களை அருவறுப்பாக விமர்சிக்கக்கூடியவர் லியோனி. இவரை இந்த பதவியில் நியமிப்பதன் மூலம் தவறான கருத்துக்கள் மாணவ மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.