வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

0
125
WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!
WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது.

வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி பயனாளர்களின் தகவல்கள் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இது பயனர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வாட்ஸ்அப் இந்த புதிய கொள்கையால் பயனர்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்பு தன்மையும், அந்தரங்கம் குறித்தும் பயனர்கள் மிகுந்த அச்சம் தெரிவித்தனர். மேலும் பலர் இதை கைவிடவும் முயற்சி செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த வாட்ஸ்அப் நிறுவனம் நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாத தன்மையுடனும், தொடர்ந்து பாதுகாப்புடன் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியது.

பயனர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்துகொள்ளவும் முடியும் பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ் அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் அதற்கு விளக்கம் அளிக்கிறோம் என்று தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரீஷ் சால்வே இவ்வாறு கூறினார்.

புதிய ப்ரைவசி  கொள்கையை நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும், இதனை ஏற்காதவர்களுக்கு வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம் என்றும் கூறினார். தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை தனியுரிமைக் கொள்கையை நாங்கள் நிறுத்தி வைத்து இருப்போம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது குறித்தும் அவர் கூறினார்.