தடுப்பூசி குறித்து முதல்கட்ட மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.  கூட்டு முயற்சி இல்லாமல் தனியாகவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் கொரோனா வைரசுக்கு ஏஇஎட்டி 7442 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.