கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

0
364
#image_title

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

பத்தனம்திட்டா இராணி பெருநாடு பகுதியில் உலாவரும் புலியை பிடிக்க வனத்துறை கூண்டு அமைத்தது.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா இராணி, பெருநாடு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து மாடுகளை புலிதாக்கி கொன்றதாக அப்பகுதிகள் தெரிவித்தனார். மேலும் பல இடங்களில் புலியை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு இருந்த கால்தடத்தை வைத்து புலியா என வனத்துறையிருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கேமராகள் அமைத்தனர்.

இந்நிலையில் கேமராவில் புலி வேட்டையாடிய மாட்டை உண்ணும் படம் பதிவாகியுள்ளது.

இதனால் புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த மக்கள் தற்போது அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புலியை கூண்டு அமைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து இன்று புலி உலாவரும் பகுதியில் வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர்.

கடந்த ஆறு நாட்களில் இரு மாட்டை வேட்டையாடியுள்ளது. மேலும் புலி உலாவரும் பகுதியில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

Previous articleபிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!
Next articleதி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!