பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் சிவா இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.முதல் வைஷ்ணவி என்ற மகளும் இரண்டாவது நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இரவு வேலையை முடித்து வீட்டிற்குச் சென்ற சிவா வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததால்.
அதிர்ச்சி அடைந்தார்.அதிர்ச்சியில் தனது வீட்டின் பின்னாடிஉள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார் அப்போது வைஷ்ணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா அலறியடித்து ஓடி வந்தார்.
சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வைஷ்ணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சென்ற போலீசார் வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பக்கத்தில் வசிக்கும் வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
அப்போது வைஷ்ணவி அக்கம்பக்கத்தினரிடம் இதைப்பற்றி கூறுவார் என்று அந்த வாலிபரின் பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்து அவரது பெற்றோர் வந்தால், உன்னை பற்றி தப்பாக தெரிவிப்பதாக கூறினார். இதனால் அச்சமடைந்த வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தன்னை மேல் மாடியில் குடியிருக்கும் அந்த அக்காதான் திட்டியதாக வைஷ்ணவி தனது நோட்டில் எழுதி இருப்பதை போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வைஷ்ணவி தாயார் கூறுகையில் மேல் வீட்டில் வசிக்கும் செல்வி என்ற பெண் தனது மகளை திட்டியதாகவும் அதன் காரணமாகத்தான் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்தனது மகளின் சாவிற்கான சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.காவல்துறையினர் அதிரடி நடடிக்கை எடுத்து விசாரித்து வருகின்றனர்.