இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

Photo of author

By Amutha

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

Amutha

The girl who went to the forest at night!! Then disaster struck!!

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு நேரக்கூடிய விபரீதத்தை அறியாத சிறுமி தனியாக சென்றுள்ளார்.

வனப்பகுதிக்கு சென்று சிறுமியை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று அதே கிராமத்தில் வசித்து வரும் சரல் யாதவ் வயது.19, என்ற இளைஞர் அந்த சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

பின்னர் அங்கேயே அந்த சிறுமியை போட்டுவிட்டு அந்த கொடூரன் தப்பிச் சென்றுள்ளான். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த கொடூரன் மீது புகார் தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் அழைத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞர் சரல் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.