தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!!

0
138
#image_title

தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!!

தற்காலிக பணியிடங்களுக்கான தொடரை(பணிக்காலத்தை) அரசு நீட்டிக்க வேண்டும் என்ற தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்காலிக பணியிடங்களுக்கான தொடர்பு நீடிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1990 முதல் 2019ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த அரசு பள்ளிகளுக்கு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்கள் 2460 முதுநிலை ஆசிரியர்கள் என்று மொத்தம் 2760 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப் பட்டு பணியமர்த்தப்பட்ட 300 தலைமை ஆசிரியர்களுக்கும் 2460 முதுநிலை ஆசிரியர்களுக்குமான பணிக்காலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த 2460 நபர்களுக்களின் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு அதாவது வேலை செய்யும் காலத்தை நீட்டிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை கவனமாக கையாண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை அரசு பள்ளிகளில் உருவாக்கப்பட்ட 2760 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் 2026ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதே போலீஸ் 2011 முதல் 2013 ஆகிய காலகட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கான 900 முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலம் கடந்த 2022ம் ஆண்டு முடிவடைந்ததை அடுத்து அவர்களின் பணிக் காலமும் நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையையும் ஏற்ற பள்ளிக்கல்வித்துறை துறை 900 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணிக் காலத்தை 2027ம் ஆண்டு வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் தாமதம் இன்றி கிடைக்கும் என்று அதிகாரிகள் நடவடிக்கை தெரிவித்துள்ளனர்.