செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்!

0
144
#image_title

செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயங்கி வரும் Whatsapp செயலியில் Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு அடுக்கடுக்கான அப்டேட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்.மெட்டா நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது வருடாந்திர உரையாடல் மாநாடு நேற்று முன்தினம் மும்பையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் Whatsapp செயலியை பயன்படுத்தும் தனி நபர் மற்றும் வணிகங்களுக்கான புதிய அசத்தலான அம்சங்களை மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுக படுத்தினர்.அதில் வணிக சுய விவரங்களுக்கான ஃப்ளோஸ்,பேமண்ட் வித் யுபிஐ & கார்ட் மற்றும் மெட்டா வெரிஃபைடு ஆகிய மூன்று புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Whatsapp செயலில் ஒருவர் சாட் செய்து கொண்டிருக்கும் பொழுதே ரயில் இருக்கைகளைத் தேர்வு செய்யவது,உணவை ஆர்டர் மற்றும் டிக்கெட்டு முன் பதிவு ஆகியவை செய்ய முடியும்.இந்த அம்சத்தை Whatsapp பிசினஸ் பிளாட்ஃபார்ம் மூலம் அனைத்து Whatsapp பயனாளர்களுக்கும் அறிமுக படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது.

அதேபோல் ஒருவரிடம் Whatsapp உரையாடலில் ஈடுபட்டிருக்கும் பொழுதே Whatsapp மூலம் நேரடியாக பொருட்களை ஆர்டர் செய்யும் வகையிலான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இந்த பொருட்களை வாங்க
UPI செயலிகள்,டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் முறைகளை உபயோகப்படுத்தி Whatsapp மூலம் பணம் செலுத்தும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.இந்த அம்சங்கள் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பாட்டிற்கும் நிலையில் இதையடுத்து மற்ற நாடுகளின் Whatsapp பயனாளர்களுக்கு இந்த சேவையை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே  Communities வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய செயலிகளுக்கு வெளியிட்டு இதன் மூலம் ஒருவர் ஒரே நேரத்தில் 32 Whatsapp எண்களுக்கு 32 வீடியோ கால் செய்து பேசமுடியும் உள்ளிட்ட பலவேறு புது புது அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி பயனாளர்களை குஷிப்படுத்தி வருகிறது.