கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3-ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது, 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகள், 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அதே சமயத்தில், மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம், 3-ம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையை புறந்தள்ளி அங்கீகாரம் அளிப்போம்.
பொது சுகாதார அவசரநிலையின்போது, ஆபத்தை விட பயன்கள் அதிகமாக இருப்பதாக தெரியவந்தால், அங்கீகாரம் கொடுப்பது சாத்தியம்தான். ஆனால், இந்த முடிவு, அறிவியல் மற்றும் மருத்துவம் அடிப்படையிலானதாக இருக்கும். ஜனாதிபதியை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் இதை செய்வதாக கருத வேண்டாம் என்று அவர் கூறினார்.