திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

0
136
The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!
The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27.

அதேபோல புட்லூர் மண்டலத்தில் உள்ள  கருச்சிந்தலப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு – லட்சுமிதேவியின் மகள் ரமாதேவி  வயது.24.

ரமாதேவியும் மஞ்சுநாத்தும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு  வீட்டாரும் முதலில்  சம்மதிக்கவில்லை. ஆனால் இரண்டு பேரும் இரண்டு குடும்பத்தினரிடமும் பேசி வற்புறுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர்.

இதனால் இவர்கள் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில்  விமர்சையாக நடைபெற்றது. அதன் பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் தங்கள் இல்லற  வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் திங்கள்கிழமை மாலை சலவாரிபள்ளி என்ற கிராமம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தனது கணவருடன் செல்போனில் பேசி உள்ளார்.

அதன் பின்னர் தனது மனைவி இறந்த தகவல் அறிந்த மஞ்சுநாத்தும் அன்று திங்கட்கிழமை இரவே இரண்டு முறை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை பெரும் பாடுபட்டு காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இருப்பினும் அனைவரையும் ஏமாற்றிவிட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் குடும்பத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மஞ்சுநாத் வீட்டில் இருந்து நைசாக வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் அவர் தாடிபத்திரி ரயில் நிலையம் அருகே வந்து ஓடிய ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் ரமாதேவியின் பெற்றோர் மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஜி.ஆர்.பி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleதென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!
Next articleதிமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு