திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

0
34
Saba Rajendran
Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த விவசாயிகள் பாஜக,அதிமுக மற்றும் ஆளும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பாமகவை தவிர வேறு எந்த கட்சியும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதை பொறுத்துக் கொள்ளாத திமுக தலைமை தனது வழக்கமான அரசியலை கையில் எடுத்தது. அந்த வகையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் வாயிலாக நெய்வேலி மக்களுக்காக பாமக நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கை விட்டனர்.

இந்நிலையில் நெய்வேலி தொகுதியை சார்ந்த விவசாயிகள் பலரும் கடந்த காலங்களில் திமுக நடத்திய போராட்டங்களையும் இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ள செயல்பாடுகளையும் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். நெய்வேலி NLC விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நெய்வேலி தொகுதியை சார்ந்த திமுக எம்.எல் ஏ ராஜேந்திரன் எங்கே என அவரை தேடும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் கூறியுள்ளதாவது.

நெய்வேலி தொகுதியில் 500 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பா.ம.க

பா.ம.க ஜெகன் vs சபா.ராஜேந்திரன் 2021 தேர்தலில் நின்றார்கள்

திமுக ராஜேந்திரன் அவர்கள்

பல கோடி ரூபாய் பணத்தை செலவு செய்தார்

நடுவில் துரோகி கூட்டம் வேற

ஜெகன் அவர்கள் வெற்றி பெற கூடாது என

திமுகவினரை விட இரவு பகலுமாக நெய்வேலி தொகுதியில் வேலை செய்தனர்

பா.ம.க விற்கு ஆதரவாக சில மாற்று கட்சி இளைஞர்கள் வாக்கு சேகரித்து வந்தார்கள் அவர்களையும் அந்த கும்பல் மிரட்டி விட்டனர்

ஓட்டு பதிவு நாள் வந்தது பல வன்னிய கிராமங்களில் பா.ம.க ஜெகன் அவர்களுக்கு ஓட்டு அதிகமாக பதிவாகி கொண்டு இருந்தது இதை அறிந்த திமுகவினரை விட அந்த துரோகி கூட்டம் பல இடங்களில்

வாக்கு பதிவாகும் இடத்தில் பிரச்சனை செய்து காலதாமதம் ஏற்படுத்தினர் இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது

ஓட்டு எண்ணிக்கை நாள் வந்தது

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

முதல் சுற்று பா.ம.க முன்னிலை என தொடங்கியது

இரு வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வந்தார்கள் ஆனால்

3-மணி முதல் பா.ம.க வேட்பாளர் ஜெகன் அவர்கள் 3000 வாக்கு மேல் முன்னிலை வகித்தார் மாலை 5:30 அளவில் 500 ஓட்டு வித்தியாசத்தில் பா.ம.க ஜெகன் தோல்வி என அறிவித்தனர்

ஒட்டு மொத்த நெய்வேலி மக்களே அதிர்ச்சி அடைந்தனர் காரணம் பா.ம.க வின் களப்பணி பா.ம.க வேட்பாளர் ஜெகன் மக்களிடத்தில் இருந்த நல்ல பெயர்

அவர் போகாத இடமில்லை ஓட்டு கேட்காத வீடு இல்லை

இங்கு நல்லவர்களுக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது.பணம் மட்டுமே இங்கு வென்றது

அதனால் தான் NLC பிரச்சனையில்

நெய்வேலி தொகுதி திமுக MLA

எங்க தான் இருக்கிறார் என விவசாய மக்கள் புலம்பிட்டு கிடக்குறாங்க என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த பதிவால் அப்பகுதி திமுகவினர் மக்களை சமாளிக்க முடியாமல் கலக்கத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.