Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
'மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்' - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

‘மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்’ – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

மார்ச் 21, 2024 by Savitha

‘மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்’ – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது அக்கட்சியின் தலைமை.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், பாஜக தலைமையிலான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், அதிமுக தேமுதிக கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் தனித்து நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தது அதற்கான வேட்பாளர் பட்டியலையும் இன்று வெளியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி தலைமை.

அந்த வேட்பாளர் பட்டியலில் இருபது ஆண்கள், இருபது பெண்கள் என சமமான அளவில் வேட்பாளர்களை தேர்தெடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஆறு வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அக்கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் அடுத்தக்கட்டமாக இருபது மூன்று வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முன்னுரிமை காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயிகள் சின்னத்தை வேறொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில் சின்னத்தை திரும்ப பெற கட்சி பாடுபட்டு வருகிறது.

சின்னம் உறுதியாகாத நிலையில் 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யவுள்ளார் சீமான்.

மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்பதன் அடிப்படையில் வாக்கு சேகரித்து வருவது குறிபிடதக்கது.

Categories Breaking News, News, Politics Tags Nam Tamilar Party which released the list of candidates, Nam Tamilar Party's logo, Parliament Election, Politics, Seeman
மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!
இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?
© 2026 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress