தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கமை பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எவருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர் அதனால் குரங்கமை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிலை எனவும் தெரிவித்தார்.
மேலும் உடலில் கொப்பளங்கள் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து வருகின்றார்கள். மேலும் குரங்கம்மை நோய் பாதிப்பு மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் கூறினார். இது குறித்து சமூக வலைதளங்களில் தேவையில்லாத அச்சத்தை பரப்புவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் செஸ் ஒலிம்பியா போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் 21 நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மருத்துவக் குழுவினர் உள்ளனர் எட்டு விடுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. போட்டிகள் நடைபெறும் இரண்டு அரங்குகளிலும் சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவினர் இருக்கின்றார்கள் ஒரு விளையாட்டு வீரர் நிறைமாத கற்பனையாக இருப்பதால் அவருக்கு ஒரு மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.