கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

0
177
The incident that took place in the Avinasilingeswarar temple in Coimbatore district! Attack on the blind woman!
The incident that took place in the Avinasilingeswarar temple in Coimbatore district! Attack on the blind woman!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அங்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு வழக்கம் ஆக டோக்கன்கள் வழங்கப்படும் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே அன்னதானம் போடப்படும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்  சுவாமி தரிசனம் செய்ய  தங்கமணி மற்றும் அவரது மகள் இந்திராணி வந்தனர். இந்திராணிக்கு பார்வை குறைபாடு உள்ளது.

மேலும் தங்கமணியும் இந்திராணியும் அன்னதானம் உண்பதற்காக சென்றுள்ளனர்.  அங்குள்ள விதிமுறை தெரியாமல் தங்கமணி மற்றும் இந்திராணி உணவு உண்பதற்காக சென்றுள்ளனர் அப்போது கோவில்  பணியாளர் எஸ் கலாமணி  என்பவர் டோக்கன் இல்லாமல் சாப்பிட அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு தங்கமணிக்கும் கலாமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அந்த வாக்குவாதத்தில்  கோவில் பணியாளர் கலாமணி இந்திராணியை தாக்கியுள்ளார்.  இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மேலும் கோவில் நிர்வாகித்தனர் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  கோவில் பணியாளர் எஸ் கலாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோவிலில் நடைபெறவுள்ள  விசாரணைக்கு நேரில் ஆஜராகி அவரது தரப்பில் உள்ள விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.  மேலும் பார்வையற்றவரை தாக்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவி காணப்பட்டது.