கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

0
374
#image_title

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இன்று(செப்டம்பர்22) தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட வீரர்கள் தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

பேட் கம்மின்ஸ் தலைமையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜூஸ் ஹேசல்வுட், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா ஆகிய முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மாற்றம் இல்லை. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் குறிப்பிடதக்க மாற்றங்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செய்துள்ளது.

அதாவது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா ஆகியேர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாகவும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடவுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யக்குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்த தொடர் முக்கியமான ஒரு தொடராகும். இதில் சிறப்பாக விளையாடி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். ருத்ராஜ் கெய்க்வாட் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடச் சென்றதால் இந்த தொடரில் அவர் இடம் பெறவில்லை.

இரண்டு அணிகளின் பெயர்களையும் பார்க்கும் பொழுது பலம் வாய்ந்த அணியாகத்தான் தெரிகின்றது. இருந்தாலும் இரண்டு அணியும் களத்தில் இறங்கி விளையாடும் பொழுதுதான் யார் பலம் வாய்ந்த அணி என்று தெரியும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று(செப்டம்பர்22) மதியம் 1.30 மணிக்கு மொஹாலியில் தொடங்குகின்றது. மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருநாள் போட்டி நடைபெற்றது இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இது ஆகும்.

மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதே போல நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

Previous articleவாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!
Next articleஇன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!